Friday, September 19, 2014

கவிஞர் வைரமுத்து பாடல்கள்


ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாளன் காட்சி
இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி
நாட்டரசன் கோட்டையிலே பொண்ணெடுத்து
மாமா நூறு சனம் பார்க்கையிலே பூ முடிச்சா
(ஆச்சி..)

வெள்ள பணியாரம் போல வெள்ளருக்கன் பூவ போல
வெள்ல மனம் உள்ள புள்ள நீதான் வாம்மா
வெள்ள பணியாரம் போல வெள்ளருக்கன் பூவ போல
வெள்ல மனம் உள்ள புள்ள நீதான் வாம்மா
ஊருணியின் நீரப்போல ஊர் இழுக்கும் தேரைப்போல
ஓடி வந்து என்னை கொஞ்சு மாமா மாமா
ஊருணியின் நீரப்போல ஊர் இழுக்கும் தேரைப்போல
ஓடி வந்து என்னை கொஞ்சு மாமா மாமா
பரிசம் கண்ணாளம் போட்டாச்சு
பதிலும் எண்னான்னு கேட்டாச்சு
புருஷன் நீதான்னு ஆயாச்சு
பூவும் பிஞ்சாகி காயாச்சு
இரவா பகலா எளைச்சேன் பொதுவா
உன்னால ராத்தூக்கம் போச்சு
(ஆச்சி..)


படம்: மனதில் உறுதி வேண்டும்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: சித்ரா, மனோ
வரிகள்: வைரமுத்து


Title: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 


பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசுது பூவொன்று
எண்ணம் போலே எண்ணம் போலே வந்தது வாழ்வென்று
தாய் தந்தை வாழ்த்துக்களால்
இன்று என் காதல் ஈடுரூதே
ஏன் இந்த மாற்றங்களோ
இன்று என் கண்ணில் தேனூருதே
பொங்குதே சந்தோஷம் பொங்குதே
சிந்துதே கண்ணீரும் சிந்துதே
(பூசு மஞ்சள்..)

கடல் நீரை கடன் வாங்கி ர்ன் கண் கொண்டு அழுதாலும்
நான் சொல்லும் நன்றிக்கு போதாதம்மா
பொங்குதே சந்தோஷம் பொங்குதே
இடம் மாறி வந்தாலும் தடம் மாறி போகாமல்
என் காதல் கைக்கூட கண்டேனம்மா
சிந்துதே கண்ணீரும் சிந்துதே
எண்ணம் போல் வாழ்வு கண்டேன் எல்லோரும் வாழ்த்தட்டுமே
முன்னூறு ஆண்டு வரை என் மஞ்சள் வாழட்டுமே
ஏழு பிறப்பினிலும் மறு பிறப்பினிலும்
இந்த தந்தைக்கும் தாய்க்கும் வந்து மகளென்று பிறந்திட
ஏங்குதே என் உள்ளம் ஏங்குதே
பொங்குதே சந்தோஷம் பொங்குதே
(பூசு மஞ்சள்..)

ஆண் என்றால் ஒரு வீடு பெண் என்றால் இரு வீடு
தாய்நாட்டு பண்பாடு தடை போடுமே
பொங்குதே கண்ணீரும் பொங்குதே
கிளை எங்கு போனாலும் என் வேர்கள் இங்கேதான்
என் ஜீவன் இங்கும் அங்கும் விளையாடுமே
பொங்குதே சந்தோஷம் பொங்குதே
பொன் மாலை தந்தவனை எந்நாளும் காதலிப்பேன்
வெண் மேகம் சிறகு தந்தாஇ விண்ணோடு வலம் வருவேன்
எந்தன் உயிர் மலரை உந்தன் திருவடியில் தந்து
உனக்குள் கரைந்து இந்த உலகத்தை மறந்திட
ஏங்குதே என் உள்ளம் ஏங்குதே
பொங்குதே கண்ணீரும் சிந்துதே
(பூசு மஞ்சள்..)


படம்: கனவே கலையாதே
இசை: தேவா
பாடியவர்: அனுராதா பாட்வல்
வரிகள்: வைரமுத்து


Title: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 


பேசா மடந்தையே
விழி பேசும் சித்திரமே
சேலைக் குழந்தையே
என் செல்லக் கலவரமே

இதயமெனும் பூப்பறித்தேன்
நரம்பு கொண்டு சரம் தொடுத்தேன்
கையில் கொடுத்தேன் கண்ணே
நீ காலில் மிதித்தாய் பெண்ணே
(பேசா மடந்தையே..)

ஏழு நிறங்களை எண்ணி முடிக்கும் முன்
வானவில் கரைந்தது பாதியிலே
மறுபடி தோன்றுமா பார்வையிலே
பெண்ணின் மன நிலை கண்டு தெளியும் முன்
வாழ்க்கை முடிந்தது குழப்பத்திலே
வானம் நடுங்குது மயக்கத்திலே

காதலை சொல்லி கரம் குவித்தேன்
கற்புக்கு பழி என்று கலங்குகிறாய்
பூஜைக்கு உனக்கு பூப் பறித்தேன்
பூக்களின் கொலை என்று நடுங்குகிறாய்

வார்த்தைகளால் காதலித்தேன்
ஜாடைகளால் சாகடித்தாய்
மழை தான் கேட்டேன் பெண்ணே
இடி மின்னல் தந்தாய் கண்ணே
(பேசா மடந்தையே..)

மூங்கில் காட்டிலே தீயும் அழகுதான்
ஆனால் அதை நான் ரசிக்கவில்லை
ஐயோ இதயம் பொறுக்கவில்லை

கோபம் மூழ்கையில் நீயும் அழகுதான்
ஆனால் அதை நான் சுகிக்கவில்லை
சகியே என் மனம் சகிக்க வில்லை

உன் சினம் கண்டு என் இதயம்
உடம்புக்கு வெளியே துடிக்குதடி
உன் மனம் இரண்டாய் உடைந்ததென்று
என் மனம் நான்காய் உடைந்ததடி

விதை உடைந்தால் செடி முளைக்கும்
மனம் உடைந்தால் புல் முளைக்கும்
தண்டனை என்பது எளிது
உன் மௌனம் வாலினும் கொடியது
(பேசா மடந்தையே..)


படம்: மொழி
இசை: வித்யாசாகர்
பாடியவர்: மது பாலகிருஷ்ணன்
வரிகள்: வைரமுத்து


Title: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 


ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் பூப்பந்தல் உன் கூந்தல் என்னூஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்
(ரோஜாவை..)

இலைகளில் காதல் கடிதம் வந்து எழுதும் பூஞ்சோலை
இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
(இலைகளில்,.)
மௌனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தாலாட்டும் பூச்செண்டு ஆ ஆ
(ரோஜாவை..)

வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர்காலம் முழுதும் உனக்கு மகிழ்ந்து வேராவேன்
(வசந்தங்கள்..)
பூவிலே மெத்தைகள் தைத்து கண்ணுக்குள் மங்கையை வைத்து
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஆ ஆ
(ரோஜாவை..)


படம்: நினைவெல்லாம் நித்யா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
வரிகள்: வைரமுத்து


Title: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 


காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீளம் கொண்டுவா பேரா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்
(காதல்..)

கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன்
பேனாவில் ஊற்றி வைத்தது எதன் உயிரல்லோ
பொண்ணே உன் கடிதத்தைப் பூவாலே திறக்கின்றேன்
விரல் பட்டால் உந்தல் ஜீவன் காயம் படுமல்லோ
அன்பே உந்தன் அன்பில் ஆடிப் போகின்றேன்
செம்பூக்கள் தீண்டும்போது செத்துச் செத்து பூப்பூக்கிறேன்
(காதல்..)

கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா
மஞ்சத்தில் உறங்கும்போது சிணுங்க மாட்டேனா
காலோடு கொலுசல்ல கண்ணோடு உயிரானாய்
உயிரே நான் உறங்கும்போதும் உறங்கமாட்டாயா
தப்பு செய்யப் பார்த்தால் ஒப்புக்கொள்வாயா
மேலாடை நீங்கும்போது வெட்கம் என்ன முந்தானையா
(காதல்..)


படம்: ஜோடி
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னி மேனன், S ஜானகி
வரிகள்: வைரமுத்து




Title: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 


ஜீவா ஜீவா ஓ ஜீவா ஓ ஜீவா

அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா
ஆனந்தப் பூவே அன்பே வா ஜல்
அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா
ஆனந்தப் பூவே அன்பே வா

என்னைக் கொள்ளையிட்டுப் போகும் அழகே வா
என்னைக் கொன்றுவிட்டுப் போகும் மலரே வா
வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா
(என்னைக்..)

பூக்களையே ஆயுதமாய் கொண்டவன் நீதானே
பூவெறிந்து என்னுயிரைக் கொன்றவன் நீதானே
என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா
பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா
தேவைகள் தீர்க்கிற தேவா தேவா வா

ஒரு பூவுக்குள் வசிக்கின்ற நிலவே வா
என் போர்வைக்குள் அடிக்கின்ற வெயிலே வா
புதுப் புன்னகை பூக்கும் பூவே வா ஜீவா ஜீவா

காதல் இல்லாத நகரம்
அது காற்று இல்லாத நரகம்
(காதல்..)
காற்று இல்லாத இடமும்
அட காதல் தெரியாமல் நுழையும்
கண்ணில் மணியாகி உன்னில் உயிராகி
காதல் யோகம் கொண்டாட வேண்டும்

சந்திர மண்டலம் எல்லாம்
நாம் தாவி விளையாட வேண்டும்
ஒன்பது கிரகம் தாண்டி
நாம் ஓடி விளையாட வேண்டும்
வானம் முடியும் முடியாது காதல் பயணம்
(என்னைக்..)
(அஞ்சாதே..)

காதல் தப்பென்று சொல்ல
அது கெட்ட சொல்லொன்றும் அல்ல
(காதல்..)
இரவு நேரத்துப் போரில்
நீ என்னை எப்போது வெல்ல
பெண்மை தோற்றாலும் ஆண்மை தோற்றாலும்
முடிவில் இருவரும் வென்றாக வேண்டும்
ஒவ்வொரு காலையின் போதும்
உன் மார்பில் நான் தூங்க வேண்டும்
காலங்கள் முடிகின்ற போதும்
உனை நெஞ்சில் நான் தாங்க வேண்டும்
மீண்டும் மீண்டும் நாம் காதல் ஜென்மம் காணலாம்
(என்னைக்..)


படம்: ஜோடி
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சீர்காழி சிவசிதம்பரம், ஸ்வர்ணலதா
வரிகள்: வைரமுத்து


Title: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 


கை தட்டித் தட்டி அழைத்தாளே
என் மனதை தொட்டுத்தொட்டுத் திறந்தாளே
என் உயிரை மெல்ல துளைத்து திறந்தாளே
ஜீவன் கலந்தாளே அந்த தேன்குயிலே

தர ரம்பம் தர ரம்பம் தர ரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
பெண் எப்போதும் சுகமான துன்பம்
பொன் வானேங்கும் அவளின் பிம்பம்

ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்
வாழ்வு மரணத்தை வெல்லும்
தர ரம்பம் தர ரம்பம் தர ரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்

ரத்தினத்துத் தேரானாள்
என் மனசுக்குள் சத்தமிடும் பூவானாள்
என் பருவத்தைப் பயிர் செய்யும் நீரானாள்
என் நெஞ்சக்குளத்தில் பொன் கல்லை எறிந்தாள்
அலை அடங்குமுன் நெஞ்சத்த்தில் குதித்தாள்
விழியால் நெஞ்சுடைத்துவிட்டாள்
ஸ்பரிசங்களால் பின் இணைத்துவிட்டாள்

தர ரம்பம் தர ரம்பம் தர ரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
பெண் எப்போதும் சுகமான துன்பம்
பொன் வானேங்கும் அவளின் பிம்பம்

ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்
வாழ்வு மரணத்தை வெல்லும்
தர ரம்பம் தர ரம்பம் தர ரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்

பால்வண்ண நிலவெடுத்துப்
பாற்கடலில் பலமுறை சலவை செய்து
பெண்ணுருவாய் பிறந்தவள் அவள்தானோ
என் கவிதைகளில் கண் மலர்ந்தவளோ
என் மௌனங்களில் மொழி பெயர்த்தவளோ
அழகைத் தத்தெடுத்தவளோ
என் உயிர் மலரைத் தத்தரித்தவளோ

தர ரம்பம் தர ரம்பம் தர ரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
பெண் எப்போதும் சுகமான துன்பம்
பொன் வானேங்கும் அவளின் பிம்பம்

ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்
வாழ்வு மரணத்தை வெல்லும்
தர ரம்பம் தர ரம்பம் தர ரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்


படம்: ஜோடி
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், திம்மி
வரிகள்: வைரமுத்து


Title: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 


வண்ணப்பூங்காவைப்போல் எங்கள் வீடல்லவா

வண்ணப்பூங்காவைப்போல் எங்கள் வீடல்லவா
எங்கள் பொன் மாத பூக்களுக்கும் தாயல்லவா
இங்கே தேன் குளித்து வந்த தென்றல் நானே
அண்ணன்களோ எந்தன் உயிர்தானே
(வண்ணப்..)

வண்ணப்பூங்கா பூங்கா வண்ணப்பூங்கா

வெண்ணிலா வெண்ணிலா தங்கையானதோ
வெண்ணிலா தூங்க ஒரு வானம் வாங்கவோ
(வெண்ணிலா..)

விண்மீன்களைக் கேட்டால் அன்னங்கள்
எல்லாம் பறித்து தருவார்கள்
நான் வானவில் கேட்டால் ஏணியிலேறி
ஒடித்து ஒடித்து தருவார்கள்
ஒற்றைத் தங்கை எனக்காக உயிரை தருவார்கள்
ஓ இன்னுயிர் போலெனைக் காப்பதும் ஏனோ
ஓ இன்னொருவன் கையில் என்னை ஒப்படைக்கத் தானோ
பெண்கள் வாழ்வே ரெட்டை வாழ்வோ ரெட்டை வாழ்வோ
(வண்ணப்..)
(வெண்ணிலா..)

அன்னையின் மடியினில் ஓரிடம் தேடி
தந்தையின் தோள்களில் சில பொழுதாடி
அண்ணன்கள் மார்பினில் கவிதைகள் பாடி
வாழ்வே கனவா
பெண்ணினம் ஒரு வகை பூச்செடியாகும்
வேருடன் பெயர்ந்தொரு வேறிடம் போகும்
நிறமற்ற ஒரு இடம் நிரந்தரம் ஆகும்
கனவே வாழ்வா
நானுமென்ன ஒரு பூச்செடியா
இந்தப் பூச்செடிகு இதயம் இல்லையா
(வண்ணப்..)
(வெண்ணிலா..)


படம்: ஜோடி
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: மகாலெட்சுமி ஐயர்
வரிகள்: வைரமுத்து


Title: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 


காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம் ஓ
(காதல்..)

தேடினேன் ஓ என் ஜீவனே
தென்றலிலே மிதந்தது வரும் தேன் மலரே
நீ என் நாயகன் காதல் பாடகன்
அன்பில் ஓடி இன்பம் கோடி என்றும் காணலாம்
(காதல்..)

தாங்குமோ ஓ என் தேகமே
மன்மதனின் மலர் கணைகள் தோள்களிலே
மோகம் தீரவே வா என் அருகிலே
உள்ளம் கோவில் கண்கள் தீபம் பூஜை காணலாம்
(காதல்..)


படம்: அலைகள் ஓய்வதில்லை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, ஜென்ஸி
வரிகள்: வைரமுத்து


Title: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 


மரகதவல்லிக்கு மணக்கோலம்
என் மங்கலச் செல்விக்கு மலர்க்கோலம்.
கண்மணித் தாமரை கால் கொண்டு நடந்தால்
கண்களில் ஏன் இந்த நீர்க்கோலம்
கோலம் திருக்கோலம் (மரகதவல்லிக்கு)

காலையில் கதம்பங்கள் அணிந்திருப்பாள்
மாலையில் மல்லிகை முடிந்திருப்பாள்
திங்களில் சாமந்தி வைத்திருப்பாள்
வெள்ளியில் முல்லைகள் சுமந்திருப்பாள்
கட்டித் தங்கம் இனிமேல் அங்கே என்ன பூவை அணிவாளோ
கட்டிக் கொண்ட கணவன் வந்து சொன்ன பூவை அணிவாளோ.
தினந்தோறும் திருநாளோ (மரகதவல்லிக்கு)

மலர் என்ற உறவு பறிக்கும் வரை
மகள் என்ற உறவு கொடுக்கும் வரை
உறவொன்று வருவதில் மகிழ்ந்து விட்டேன்
உறவொன்று பிரிவதில் அழுது விட்டேன்
எந்தன் வீட்டு கன்று இன்று
எட்டி எட்டிப் போகிறது
கண்ணின் ஓரம் கண்ணீர் வந்து
எட்டி எட்டிப் பார்க்கிறது
இமைகள் அதை மறைக்கிறது (மரகதவல்லிக்கு)




படம் : அன்புள்ள அப்பா
இசை : சங்கர் கணேஷ்
வரிகள் : வைரமுத்து
குரல் :K.J.ஜேசுதாஸ்


Title: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 


பூக்கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை
பூக்கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை
அந்தப் பௌர்ணமி என்பது ஒரு மாதத்தின் புன்னகை
உன் வருகையில் பூத்ததென்ன என் வாழ்க்கையின் புன்னகை
என் வாழ்க்கையின் புன்னகை
(பூக்கொடியின்..)

உனது நிழல் தரைவிழுந்தால் என் மடியில் ஏந்திக்கொள்வேன் ஆ
உனது நிழல் தரைவிழுந்தால் என் மடியில் ஏந்திக்கொள்வேன்
வான் மழையில் நீ நனைந்தால் தென்றல் கொண்டு நான் துடைப்பேன்
ஒரு நாள் எனை சோதித்துப் பார் ஒரு வார்த்தைக்கு உயிர் கொடுப்பேன்
ஒரு வார்த்தைக்கு உயிர் கொடுப்பேன்
(பூக்கொடியின்..)

நீலம் மட்டும் இழந்துவிட்டால் வானில் ஒரு கூரையில்லை
நீலம் மட்டும் இழந்துவிட்டால் வானில் ஒரு கூரையில்லை
சூரியனை இழந்துவிட்டால் கிழக்குகொரு திலகமில்லை
நீ ஒரு முறை திரும்பிக்கொண்டால் என் உயிருக்கு உறுதியில்லை
என் உயிருக்கு உறுதியில்லை
(பூக்கொடியின்..)


படம்: இருவர்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சந்தியா
வரிகள்: வைரமுத்து


Title: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 


வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே
வந்ததே முதற் காதல்
கண்ணிலே கண்ணிலே மதுச் சாரல்
கண்டதும் முதற் காதல்
தூண்டில் மீனா தூயவனா
காரணம் நானா நீயே நீயே சொல்
(வெண்ணிலா..)

என்னவா என்னவா எது கண்டு மையல் ஆனாய்
எதனால் எதனால் இமை கடந்து கண்ணாய் போனாய்
நீயெங்கோ பிறந்தாய் நானெங்கோ பிறந்தேன்
ஒரே ஒரு பார்வையால் உயிரைக் குடித்தாய்
(வெண்ணிலா..)

கண்களை மூடினால் கண் வந்து உள்ளம் கிள்ளும்
கட்டிலை நாடினால் இரவின்று நீளம் கொள்ளும்
வேரோடு துடிக்க யாரோடு உறைக்க
கனாக் கண்ட காட்சிகள் கையில் வருமா
(வெண்ணிலா..)


படம்: இருவர்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ஆஷா போஷ்லே
வரிகள்: வைரமுத்து


Title: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 


அம்மாக்களே ஓ அப்பாக்களே
சொந்தங்கள் இப்போ சுட்டுங்களேன்
எங்களைப் புரிந்துக்கொள்ளுங்கள்
உங்கள் உலகம் தத்தம் புதுசு
எங்கள் உலகம் புத்தம் புதுசு
இனிமேல் எங்கள் தேசியப்பறவை
ஆக்கிரோச்சியன்கள் அறிவுப் பறவை
செல்போன் எண்கள் காதல் காதலி
இணையம் இணையம் எங்கள் இதயம்
அன்று நமது பாரத நாடு
அமெரிக்காவை கடன் கேட்கும்
இன்று எங்கள் அறிவைப்பார்த்து
அமெரிக்காவே கடன் கேட்கும்
அன்று நமது பாரத நாடு
அமெரிக்காவை கடன் கேட்கும்
இன்று எங்கள் அறிவைப்பார்த்து
அமெரிக்காவே கடன் கேட்கும்

உங்கள் போட்டி உள்ளூருப்போட்டி
எங்கள் போட்டி உலகப்போட்டி
எல்லையில் இல்லை தில்லையில் இல்லை
டெல்லியில் இல்லை திருச்சியில் இல்லை
மதுரைக்காட்டும் மாணவனுக்கும்
மாஸ்க்கோ மாணவன் போட்டி
லாலாப்பேட்டை மாணவனுக்குக்
லண்டன் மாணவன் போட்டி
சிகாலப்பட்டி மாணவனுக்கு
சிட்னி மாணவன் போட்டி
வாடிப்பட்டி மாணவனுக்கு
வாஷிங்டன்னில் போட்டி
எட்டுத்திசையய் எங்கள் பக்கம் திரும்பி
வைக்கும் திருவணிகம்
இண்டர்னேஷனல் சந்தையில் இன்று
இந்திய மூளைக்கு விலை அதிகம்
சில்மிஷம் ஒன்றில் கல் விஷம் இல்லை
ஸ்பரிசம் உண்டு நேசம் இல்லை
தகவல் உண்டு தாண்டுதல் இல்லை
போட்டிகள் உண்டு பொறாமை இல்லை
(அன்று..)

எங்களின் பக்கம் கல்பனா சாவ்லா
எங்களின் அண்ணி சுனிதா வில்லியம்
சுனிதா வில்லியம்

செயற்கைக்கோல் சுற்றும் உலகின் ஆண்களும்
எல்லாம் ஆக்கம் ஆச்சு
அன்றே வீடு தூரம் ஆச்சு
கண்ணால் பார்த்தால் கற்புப்போய்விடும் என்பது
உங்கள் உலகம்
கட்டியணைத்தும் கெடவில்லை என்பது
எங்கள் உலகம்
பகவான் பார்த்து ஞானம் கொடுப்பான் என்பது
உங்கள் உலகம்
பத்து நொடிகள் தியானம் வேணும் என்பது
எங்கள் உலகம்


படம்: இனிது இனிது
இசை: மிக்கி ஜே மேயர்
பாடியவர்கள்: மிக்கி ஜே மேயர், கிருஷ்ணா சைத்னே, ஆதித்யா, கார்த்திக்
வரிகள்: வைரமுத்து


Title: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 


நரம்பூக்கள் தேடும்
திருத் தும்பியே
எதை கண்டு என் மேல்
மையல் ஊற்றினாய்
(நரம்பூக்கள்..)

இது இதழ் கொண்டு
தேன் போதுமா
கூத்தாடவே குடைந்தாடவே
பூவென்ற தேன் கூடவா
பூக்காடுகள் உன் வீடுகள்
என்னோடு தான் உறவா
(நரம்பூக்கள்..)

பன்னோடு வீழும்
மழை நீரை போல
பின்னோடு நீ வந்தனை
பெண்ணோடு யாரும்
காணாத ஒன்று
என்னோடு நீ கண்டனை
ஒரு பூவினோடு
ஒரு வாசம் தானே
கொடியோடு
யாம் கண்டனம்
வெவ்வேறு பாகம்
வெவ்வேறு வாசம்
நின்னோடு யாம்
கண்டனம்

புலனைந்து போதும் பூமி வெல்ல
புலன் நூறு வேண்டும் காதல் கொள்ள
ஆழங்களில் மெய் தேடுதே
தள்ளாடுதே உன் பேர் ஹோ
நீ தொட்டதும் என் ஆவியை
எஊ உண்டானாய் தும்பியே
(நரம்பூக்கள்..)

முள்ளனையின் மேலே பள்ளிக்கொள்ளல் போலே
உள்ளம் நோகுதே காதலி
உன் பேரை சொல்லி உயிர் போகும் முன்னே
தடுத்தாளவா நாயகி
அள்ளி தந்து வாழ அங்கம் மனசால
ஆசை முற்றுதே அன்பனே
மீனான கண்ணில் நீர் வற்றும் முன்னே
மெய் சேற வா நண்பனே
பூவை சுற்றும் வண்டு ஓய்ந்து கொள்ளும்
பூமி சுற்றும் காற்றாய் ஓய்வு கொள்ளும்
முள் ஆவியை நீ தீண்டவே
காற்றாக வா தலைவா
என் வாழ்வெல்லாம் சருகானதே
நீ மட்டுமே வரவா
(நரம்பூக்கள்..)


படம்: உற்சாகம்
இசை: ரஞ்சித் பரோட்
பாடியவர்கள்: நந்தினி ஸ்ரீகர், ஹரிஹரன்
வரிகள்: வைரமுத்து


Title: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 


தென்மேற்கு பருவக்காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் முத்துச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலு சிலுவென்று
சிந்துதம்மா தூரல் முத்துத் தூரல்
வெங்காத்து பக்கக்கல்லி சட்டென்று மொட்டுவிட
செங்காத்து சொல்லிச்செடி சில்லென்று பூவெடுக்க
(தென்மேற்கு..)

வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள்
பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன்
தாளத்தில் இல்லாத சங்கீத ஸ்வரங்கள்
பாராட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்
மழைத்துளி என்ன தவம்தான் செய்ததோ
மலர் கொண்ட மார்போடு தொட்டதுதே
மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
நினைக்கையில் உள்ளூரக் கல்லூருதே
(தென்மேற்கு..)

நீயென்றும் நானென்றும் இரு வார்த்தை ஒன்றாகி
நாம் என்ற ஓர் வார்த்தை உண்டானதே
ஆனென்றும் பெண்ணென்றும் இரு வார்த்தை ஒன்றாகி
ஆள் என்ற ஓர் வார்த்தை உண்டானதே
காதல் என்னும் மந்திரத்தின் மாயமென்ன
கல்லும் முள்ளும் இப்போது பூவானதே
வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து
யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே
(தென்மேற்கு..)


படம்: கருத்தம்மா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சித்ரா, உன்னி கிருஷ்ணன்
வரிகள்: வைரமுத்து


Title: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 


டெலிபோன் மணிப்போல் சிரிப்பவள் இவளா
மெல்போர்ன் மலர்ப்போல் மெல்லிய மகளா
டிஜிட்டலில் செதுக்கிய குரலா
எலிசபெத் டெய்லரின் மகளா
ஜாகிர் ஹுசேன் தபலா இவள்தானா
சோனா சோனா இவள் அங்கம் தங்கம் தானா
சோனா சோனா இவள் லேட்டஸ்ட் செல்லுலார் போனா
கம்பியூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா
(டெலிபோன்..)

நீயில்லை என்றால் வெயிலுமடிக்காது துளி மழையுமிருக்காது
நீயில்லை என்றால் சந்திரன் இருக்காது ஒரு சம்பவம் எனக்கேது
உன் பேரைச் சொன்னால் சுவாசம் முழுதும் சுக வாசம் வீசுதடி
உன்னைப் பிரிந்தால் வீசும் காற்றில் வேலை நிறுத்தமடி
நீரில்லை என்றால் அருவி இருக்காது மழை அழகு இருக்காது
நீ இல்லாமல் போனால் இதயம் இருக்காது என் இளமை பசிக்காது
வெள்ளை நதியே உன்னுள் என்னை தினம் மூழ்கி ஆட விடு
வெட்கம் வந்தால் கூந்தல் கொண்டு உனைக் கொஞ்சம் மூடிவிடு
(டெலிபோன்..)

உன் பேரை யாரும் சொல்லவும் விடமாட்டேன் அந்த சுகத்தைத் தரமாட்டேன்
உன் கூந்தல் பூக்கள் விழவே விட மாட்டேன் அதை வெயிலில் விட மாட்டேன்
பெண்கள் வாசம் என்னைத் தவிர இனி வீசக்கூடாது
அன்னை தெரெஸ்ஸா அவரைத் தவிர பிறர் பேசக்கூடாது
நீ போகும் தெருவில் ஆண்களை விடமாட்டேன் சில பெண்களை விடமாட்டேன்
நீ சிந்தும் சிரிப்பைக் காற்றில் விடமாட்டேன் அதை கவர்வேன் தரமாட்டேன்
புடவை கடையில் பெண்ணின் சிலையை நீ தீண்டக்கூடாது
காதல் கோட்டை கற்புக்கரசா நீ தாண்டக்கூடாது
(டெலிபோன்..)


படம்: இந்தியன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஹரிஹரன், ஹரிணி
வரிகள்: வைரமுத்து


Title: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 


மார்கழிப்பூவே மார்கழிப்பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
(மார்கழி..)

பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைப்பாதைக் கடையில் தேனீர் குடிப்பேன்
வாழ்க்கையின் ஒரு பாதி நான் எங்கு ரசித்தேன்
வாழ்க்கையின் மறு பாதி நான் என்றும் ரசிப்பேன்
காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்
(மார்கழி..)

வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் சிறுப்பூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்
(வெண்பா..)

காவேரிக் கரையில் நடந்ததுமில்லை
கடற்கரை மணலில் கால் வைத்ததில்லை
சுதந்திர வானில் பறந்ததுமில்லை
சுடச் சுட மழையில் நனைந்ததும் இல்லை
சாலையில் நானாகப் போனதுமில்லை
சமயத்தில் நானாக ஆனதுமில்லை
ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை
(மார்கழி..)
(வெண்பா..)


படம்: மே மாதம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஷோபா சந்திரசேகரன்
வரிகள்: வைரமுத்து


Title: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 


வாழ்க்கை ஒரு வானம் போல
உறவு அதில் மேகம் போல
நட்பு மட்டும் சூரியன் போல
நண்பன் வாழ்க

பெற்றவர்கள் அறிந்ததை விடவும்
மற்றவர்கள் தெரிந்ததை விடவும்
முற்றும் என்னை புரிந்தது நட்பு
நட்பு வாழ்க

ஆணும் பெண்ணும் பெண்ணும் ஆணும்
காக்கும் கற்பு நல்ல நட்பு

ஓ தோழா ஓ மை ஃபிரண்ட்
என்னை மனுஷி என்ற முதல் மனிதன் நீ
ஓ தோழி ஓ மை ஃபிரண்ட்
என்னை மனிதன் என்ற முதல் மனுஷி நீ

மேக கூட்டில் துளிகளானோம்
இங்கு வந்து நதிகளானோம்
ஒருமை இங்கே பண்மையானோம்
பண்மை கூடி ஒருமையானோம்

மின்னல் வந்தால் மேகம் கூட கிழிந்து போகும்
வானம் என்றும் கிழிதல் இல்லை
வானம் போலே எங்கள் நட்பு வாழ்ந்திருக்குமே
மாலை நிழல் போல வளரும் வர்கம்
மயங்கி மயங்கி மகிழும் நெஞ்சம்

ஓ தோழா ஓ மை ஃபிரண்ட்
என்னை மனுஷி என்ற முதல் மனிதன் நீ
ஓ தோழி ஓ மை ஃபிரண்ட்
என்னை மனிதன் என்ற முதல் மனுஷி நீ

கல்லை போல அற்பமானேன்
நட்பினாலே சிற்பமானேன்
நேற்று வரையில் புள்ளி ஆனேன்
உங்களாலே வார்த்தை ஆனேன்

கொண்ட அச்சம் கூச்சம் விட்டு ஓடி விட்டதே
இது அன்பின் நன்மை தந்ததே
நெஞ்சில் வஞ்சம் வண்மம் எல்லாம் மாறி விட்டதே
பாறை மனசு பழுத்து விட்டதே
பந்த பாசம் புரிந்து விட்டதே

ஓ தோழா ஓ மை ஃபிரண்ட்
என்னை மனுஷி என்ற முதல் மனிதன் நீ
ஓ தோழி ஓ மை ஃபிரண்ட்
என்னை மனிதன் என்ற முதல் மனுஷி நீ


படம்: இனிது இனிது
இசை: மிக்கி ஜே மேயர்
பாடியவர்: கார்த்திக்
வரிகள்: வைரமுத்து


Title: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 


இனிது இனிது
இளமை இனிது
இளமை வயதில்
இதயம் இனிது

உள்ளத்தின் வயது எதுவோ
உலகத்தின் வயதும் அதுவே
எண்ணத்தின் உயரம் எதுவோ
இதயத்தின் உயரம் அதுவே

இனிது இனிது
இந்த கல்லூரியின் வாசம்
இனிது இனிது
இங்கு கற்று தரும் காற்று
இனிது இனிது
இந்த பச்சை பசும் தோட்டம்
இனிது இனிது
கண்ணில் பட்டு செல்லும் பார்வை
இனிது இனிது
இனிது இனிது
இனிது இனிது
இனிது இனிது

வீட்டு வாழ்க்கை கூட்டுக்குள் புழுவை போல்
இந்த வாழ்க்கை காட்டுக்குள் மயிலைப் போல்
சுற்றி சுற்றி அறிமுகங்கள்
சுடச்சுட அனுபவங்கள்
தினமும் செல்போன் கண் கலங்குது இங்கே
அடடா சிம்கார்ட் ஏன் உடையுது இங்கே
கனவோ மெய்யோ கண் மயங்குது இங்கே
கலந்தோம் நாம் இங்கே

இனிது இனிது
அட SMS-இல் சிணுங்கல்
இனிது இனிது
புது புத்தகத்தின் உலகம்
இனிது இனிது
அட தூங்க சொல்லும் சண்டே
இனிது இனிது
என்னை துடிக்க வைக்கும் மண்டே

இனிது இனிது
இனிது இனிது
இனிது இனிது
இனிது இனிது
இனிது இனிது
இனிது இனிது

சாலை எங்கும் மலர்களின் மாநாடு
பெண்கள் தானே கண்களின் சாப்பாடு
மனதுக்குள் புதிய தொல்லை
அதன் பேர் சொல்ல தெரியவில்லை
நதி மேல் செல்லும் பொன் இறகினை போல்
நகர் மேல் செல்லும் நம் வாழ்க்கை இங்கே
கனவோ இங்கே நம் கலயம் எங்கே
தேடல் வாழ்விங்கே

இனிது இனிது
இளமை இனிது
இளமை வயதில்
இதயம் இனிது

உள்ளத்தின் வயது எதுவோ
உலகத்தின் வயதும் அதுவே
எண்ணத்தின் உயரம் எதுவோ
இதயத்தின் உயரம் அதுவே

இனிது இனிது
இனிது இனிது
இனிது இனிது
இனிது இனிது
இனிது இனிது
இனிது இனிது
இனிது இனிது
இனிது இனிது


படம்: இனிது இனிது
இசை: மிக்கி ஜே மேயர்
பாடியவர்: கார்த்திக்
வரிகள்: வைரமுத்து


Title: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 


ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே (2)

என்னை பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்தி விட்டு போகும்
என்னை பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்தி விட்டு போகும்
உன் வாசலில் எனை கோலம் இடு
இல்லை என்றால் ஒரு சாபம் இடு
பொன்னாரமே...
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
என்னோடு நீ பாடிவா சிந்து

ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

நேரம் கூடி வந்த வேலை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
நேரம் கூடி வந்த வேலை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை
கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை
என் காதலி...
உன் போல என்னாசை தூங்காது ராணி
தண்ணீரில் தள்ளாடுதே தோனி

ஈரமான ரோஜாவே ஏக்கம் என்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே ஏங்காதே
என் அன்பே ஏங்காதே


படம் : இளமை காலங்கள் (1983)
இசை : இளையராஜா
பாடியவர் : ஜேசுதாஸ்
வரிகள் : வைரமுத்து


Title: கவிஞர் வைரமுத்து பாடல்கள்

புதிய மனிதா பூமிக்கு வா

எஃகை வார்த்து சிலிகான் சேர்த்து
வயரூட்டி உயிரூட்டி
ஹார்ட்டிஸ்கில் நினைவூட்டி
அழியாத உடலோடு
வடியாத உயிரோடு
ஆறாம் அறிவை அறைத்து ஊற்றி
ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி

புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா

மாற்றம் கொண்டு வா
மனிதனை மேன்மை செய்
உனது ஆற்றலால் உலகை மாற்று
எல்லா உயிருக்கும் நன்மையாயிரு
எந்த நிலையிலும் உண்மையாயிரு

எந்திரா எந்திரா எந்திரா என் எந்திரா
எந்திரா எந்திரா எந்திரா என் எந்திரா

நான் கண்டது ஆறறிவு நீ கொண்டது பேரறிவு
நான் கற்றது ஆறு மொழி நீ பெற்றது நூறு மொழி
ஈரல் கனையம் துன்பமில்லை இதயக் கோளாறெதுமில்லை
தந்திர மனிதன் வாழ்வதில்லை எந்திரம் வீழ்வதில்லை

கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்
அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை
இதோ என் எந்திரன் இவன் அமரன்
இதோ என் எந்திரன் இவன் அமரன்

நான் இன்னொரு நான் முகனே
நீ என்பவன் என் மகனே
ஆம் உன் பெயர் எந்திரனே

புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா

நான் என்பது அறிவு மொழி
ஏன் என்பது எனது வழி
வான் போன்றது எனது வெளி
நான் நாளைய ஜான ஒலி

நீ கொண்டது உடல் வடிவம்
நான் கொண்டது பொருள் வடிவம்
நீ கண்டது ஒரு பிறவி
நான் காண்பது பல பிறவி

ரோபோ ரோபோ பன்மொழிகள் கற்றாலும்
என் தந்தை மொழி தமிழ் அல்லவா
ரோபோ ரோபோ பல கண்டம் வென்றாலும்
என் கர்த்தாவுக்கு அடிமை அல்லவா

புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா


படம்: எந்திரன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: AR ரஹ்மான், SP பாலசுப்ரமணியம், கதிஜா ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து


Title:கவிஞர் வைரமுத்து பாடல்கள் 


இவன் பேரைச் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்
அடி அழகே உலகாழ்கே
இண்டஹ் எந்திரன் என்பவன் படைப்பில் உச்சம்

அரிமா அரிமா
நானோ ஆயிரம் அரிமா
உன் போல் பொன்மான் கிடைத்தால்
யம்மா சும்மா விடுமா
ராஜாத்தி உலோகத்தில்
ஆசைத்தீ மூளுதடி
நான் அட்லாண்டிக்கை ஊற்றி பார்த்தேன்
அக்கினி அணையலையே
உன் பச்சைத் தேனை ஊற்று
என் இச்சைத் தீயை ஆற்று
அடி கச்சைக் கனியே பந்தி நடத்து
கட்டில் இலை போட்டு
(அரிமா..)
(இவன் பேரைச்..)

சிற்றின்ப நரம்பு சேமித்த இரும்பில்
சட்டென்று மோகம் பொங்கிற்றே
நாட்சகன் வேண்டாம் ரசிகன் வேண்டும்
பெண்ணுள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே
பெண்ணுள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே
நான் மனிதன் அல்ல
அக்ரினையின் அரசன் நான்
காமுற்ற கணிணி நான்
சின்னஞ் சிறுசின் இதயம் தின்னும்
சிலிகான் சிங்கம் நான்
எந்திரா எந்திரா..

எந்திரா எந்திரா..
எந்திரா எந்திரா..
எந்திரா எந்திரா..
(அரிமா..)
(இவன் பேரைச்..)

மேகத்தை உடுத்தும் மின்னல்தான் நானென்று
ஐசுக்கே ஐசை வைக்காதே
வயரெல்லாம் ஓசை உயிரெல்லாம் ஆசை
ரோபோவைப் போபோவென்னாதே
ஏ ஏழாம் அறிவே
உள் மூளை திருடுகிறாய்
உயிரோடு உண்ணுகிறாய்
நீ உண்டு முடித்த மிச்சம் எதுவோ
அதுதான் நானென்றாய்
(இவன் பேரைச்..)
(அரிமா..)

எந்திரா எந்திரா..
எந்திரா எந்திரா..
எந்திரா எந்திரா..
எந்திரா எந்திரா..


படம்: எந்திரன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஹரிஹரன், சாதனா சர்கம்
வரிகள்: வைரமுத்து


Title: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 


காதல் அணுக்கள்
உடம்பில் எத்தனை
நியூட்ரான் எலெக்ட்ரான்
உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை
உன்னை நினைத்தால்
திசுக்கள் தோன்றும் ஆசைச் சிந்தனை
ஹையோ

சனா சனா ஒரே வினா
அழகின் மொத்தம் நீயா

நீ நியூட்டன் நியூட்டனின் விதியா
உந்தன் நேசம் நேசம் எதிர்வினையா
நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா
அழகின் மொத்தம் நீயா
நீ முற்றும் அறிவியல் பித்தன்
ஆனால் முத்தம் கேட்பதில் ஜித்தன்
உன்னால் தீம் தோம் தோம்
தீம் தோம் தோம்
தீம் தோம் தோம் மனதில் சத்தம்
தேன் தேன் தேன் இதழில் யுத்தம்
ரோஜாப் பூவில் ரத்தம்
தீம் தோம் தோம் மனதில் சித்தம்

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
கால்களைக் கொண்டுதான் ருசியறியும்
காதல் கொள்ளும் மனிதப்பூச்சி
கண்களைக் கொண்டுதான் ருசியறியும்

ஓடுகிற தண்ணியில் தண்ணியில்
ஆக்சிஜன் மிக அதிகம்
பாடுகிற மனசுக்குள் மனசுக்குள்
ஆசைகள் மிக அதிகம்

ஆசையே வா வா
ஆயிரம் காதலை ஐந்தே
நொடியில் செய்வோம்
பெண்ணே வா வா வா

காதல்காரா...
நேசம் வளர்க்க ஒரு
நேரம் ஒதுக்கு எந்தன்
நெஞ்சம் வீங்கி விட்டதே

காதல்காரி...
உந்தன் இடையைப் போல
எந்தன் பிழைப்பில் கூட
காதலின் நேரமும் இளைத்துவிட்டதே

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

காதல் அணுக்கள்
உடம்பில் எத்தனை
நியூட்ரான் எலெக்ட்ரான்
உன் காந்தக்கண்ணில் மொத்தம் எத்தனை
உன்னை நினைத்தால்
திசுக்கள் தோன்றும் ஆசைச் சிந்தனை
அன்பே

சனா சனா ஒரே வினா
அழகின் மொத்தம் நீயா

நீ நியூட்டன் நியூட்டனின் விதியா
உந்தன் நேசம் நேசம் எதிர்வினையா
நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா
அழகின் மொத்தம் நீயா

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி


படம்: எந்திரன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், ஷ்ரேயா கோஷல்
வரிகள்: வைரமுத்து


Title: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 


ஏய் ஏய் ஏய் ஓர் உண்மை சொன்னால்
ஏய் ஏய் ஏய் நேசிப்போம்

நெஞ்சம் எல்லாம் காதல்
தேகமெல்லாம் காமம்
உண்மை சொன்னால் என்னை
நேசிப்பாயா

காதல் கொஞ்சம் கம்மி
காமல் கொஞ்சம் தூக்கல்
மஞ்சத்தின் மேல் என்னை
மன்னிப்பாயா

உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா
உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா

நேசிப்பாயா நேசிப்பாயா
நேசிப்பாயா நேசிப்பாயா
பெண்கள் மேலே மையல் உண்டு
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
நீ முத்த பார்வை பார்க்கும் போது
என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்
வீசாதே மழை மேகம் எனக்கு
என் ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு
வா சோகம் இனி நமக்கெதுக்கு
யார் கேக்க நமக்கு நாமே வாழ்வதற்கு

உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா
(நென்சமெல்லாம்..)

காதல் என்னை வருடும் போதும்
உன் காமம் என்னை திருடும் போதும்
என் மனசெல்லாம் மார்கழி தான்
என் கனவெல்லாம் கார்த்திகைதான்
என் வானம் என் வாசல் திறந்து
என் பூமி என் வசத்தில் இல்லை
உன் குறைகள் நான் அறியவில்லை
நான் அறிந்தால் சூரியனில் சுத்தமில்லை
(நெஞ்சமெல்லாம்..)


படம்: ஆயுத எழுத்து
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: அட்னான் சாமி, சுஜாதா
வரிகள்: வைரமுத்து


Title: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 



என் ஸ்வாசக் காற்றே ஸ்வாசக் காற்றே நீயடி
என் ஸ்வாசக் காற்றே ஸ்வாசக் காற்றே நீயடி
உன் நினைவுகள் என் சுவாசமானது ஏனடி
நான் பாடும் பாட்டே பன்னீர் ஊற்றே நீயடி
முதல் முதல் வந்த காதல் மயக்கம்
மூச்சுக் குழல்களின் வாசல் அடைக்கும்
கைகள் தீண்டுமா கண்கள் காணுமா காதல் தோன்றுமா
என் ஸ்வாசக் காற்றே ஸ்வாசக் காற்றே நீயடி

இதயத்தைத் திருடிக் கொண்டேன்
என்னுயிரைத் தொலைத்துவிட்டேன்
இதயத்தைத் திருடிக் கொண்டேன்
என்னுயிரைத் தொலைத்துவிட்டேன்
தொலைந்ததை அடையவே மறுமுறை காண்பேனா
(என் ஸ்வாச காற்றே..)


படம்: என் ஸ்வாச காற்றே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: MG ஸ்ரீகுமார், சித்ரா
வரிகள்: வைரமுத்து

No comments:

Post a Comment

தோழிமார் கதை



ஆத்தோரம் பூத்தமரம்
ஆனை அடங்கும்மரம்
கெளையெல்லாம் கூடுகட்டிக்
கிளியடையும் புங்கமரம்

புங்க மரத்தடியில்
பூவிழுந்த மணல்வெளியில்
பேன் பார்த்த சிறுவயசு
பெண்ணே நெனவிருக்கா?

சிறுக்கிமக பாவாட
சீக்கிரமா அவுருதுன்னு
இறுக்கி முடிபோட்டு
எங்காத்தா கட்டிவிட

பட்டுச் சிறுகயிறு
பட்ட எடம் புண்ணாக
இடுப்புத் தடத்தில்நீ
எண்ணெய்வச்ச நெனவிருக்கா?

மருதாணி வச்சவெரல்
மடங்காம நானிருக்க
நாசமாப் போன
நடுமுதுகு தானரிக்க
சுருக்காநீ ஓடிவந்து
சொறிஞ்சகதை நெனவிருக்கா?

கருவாட்டுப் பானையில
சிறுவாட்டுக் காசெடுத்து
கோனார் கடை தேடிக்
குச்சிஐசு ஒண்ணுவாங்கி
நான்திங்க நீகுடுக்க
நீதிங்க நான்குடுக்க
கலங்கிய ஐஸ்குச்சி
கலர்க்கலராக் கண்ணீர்விட
பல்லால் கடிச்சுப்
பங்குபோட்ட வேளையில
வீதி மண்ணில் ரெண்டுதுண்டா
விழுந்திருச்சே நெனவிருக்கா?

வெள்ளாறு சலசலக்க
வெயில்போல நெலவடிக்க
வெள்ளித் துருவல் போல்
வெள்ளைமணல் பளபளக்க
கண்ணாமூச்சி ஆடையிலே
கால்கொலுசு நீ தொலைக்க
சூடுவப்பா கெழவின்னு
சொல்லிச்சொல்லி நீ அழுக
எங்காலுக் கொலுசு
எடுத்துனக்கு மாட்டிவிட்டு
என்வீட்டில் நொக்குப்பெத்தேன்
ஏண்டீ நெனவிருக்கா?
. . .




பல்லாங்குழி ஆடையில
பருவம் திறந்துவிட
ஈரப் பசை கண்டு
என்னமோ ஏதோன்னு
சாகத்தான் போறேன்னு
சத்தமிட்டு நான் கத்த,
விறுவிறுன்னு கொண்டாந்து
வீடு சேர்த்த நெனவிருக்கா

ஒண்ணா வளந்தோம்
ஒருதட்டில் சோறுதின்னோம்
பிரியாதிருக்க ஒரு
பெரியவழி யோசிச்சோம்
ஒருபுருசன் கட்டி
ஒருவீட்டில் குடியிருந்து
சக்களத்தியா வாழச்
சம்மதித்தோம் நெனவிருக்கா?

ஆடு கனவுகண்டா
அருவா அறியாது
புழுவெல்லாம் கனவுகண்டா
கொழுவுக்குப் புரியாது

எப்படியோ பிரிவானோம்
இடிவிழுந்த ஒடானோம்
இருவது வயசோட
இருவேறு தெசையானோம்

தண்ணியில்லாக் காட்டுக்குத்
தாலி கட்டி நீ போக
வறட்டூரு தாண்டி
வாக்கப்பட்டு நான்போக
ஒம்புள்ள ஒம்புருசன்
ஒம்பொழப்பு ஒன்னோட
எம்புள்ள எம்புருசன்
எம்பொழப்பு என்னோட

நாளும் கடந்திருச்சு
நரைகூட விழுந்திருச்சு
வயித்தில் வளந்தகொடி
வயசுக்கு வந்திருச்சு

ஆத்தோரம் பூத்தமரம்
ஆனைகட்டும் புங்கமரம்


போன வெருசத்துப்
புயல்காத்தில் சாஞ்சிருச்சு...


-வைரமுத்து




தமிழின் வளர்ச்சி

தமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும். இத்தமிழ் மொழிக்கு வரிவடிவம் அதாவது எழுத்து உருவம் என்று உருவானது? என்ற வினாவிற்குச் சரியான விடை கிடைக்கவில்லை. தற்சமயம் நமக்குக் கிட்டியுள்ள ஆதாரங்களைக் கொண்டு சில மொழிவழி உண்மையை உணர்கிறோம். இன்று நாம் பேசும் தமிழ்மொழி பல கால கட்டங்களில் பல மொழிகளோடு இணைந்து பல உருக்கள் மாறி இறுதி நிலையில் காண்கிறோம். ஆனால் தொல்கால இந்திய எழுத்து முறையை ஆராய்ச்சியாளர்கள் தமிழெழுத்து முறை மற்ற இந்திய எழுத்து முறைகளைக்குத் தாய் பெருங்குரல் கொடுக்கிறார்கள் அறிஞர்கள் பூலரும், ஐராவதம் மகாதேவன் அவர்களும்.

தமிழ் வட்டெழுத்து


தமிழ் மொழியின் எழுத்து வடிவங்களில் மிகமிகத் தொன்மை வாய்ந்தது வட்டெழுத்து முறையே! வளைந்த கோடுகள் அவ்வெழுத்து முறையில் அதிகமாகப் பயன்படுத்தப் பட்டதால் அம்முறைக்கு வட்டெழுத்து எனப் பெயர் பெற்றது. இதன் அடிப்படையில் சேர நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் கோலெழுத்துக்கள் அல்லது “மலையாண்மா” என்ற எழுத்து முறை உருவானது. இக்கோலெழுத்துகள் செப்பேடுகளிலும் ஓலைச்சுவடிகளிலும் எழுதப்பட்டன. அக்கோலெழுத்துக்களே ஆங்காங்கே கிடைத்துள்ள கல்வெட்டுக்களிலும், நடு கற்களிலும் தமிழ் எழுத்துக்கள் வட்டெழுத்தாக உருமாறி மலர்ந்து வளர்ந்தது என இரா. நாகசாமி அவர்கள் மார்தட்டிக் கூறுகிறார்.

வட்டெழுத்தின் தோற்றம்



வட்டெழுத்துக்களின் ஆரம்ப நிலைகளைத் தெரிந்து கொள்வதற்கு, நடுகற்களே சரியான சாட்சிகள். நடுகற்கள், நடப்பட்ட கற்களைத் தான் நடுகற்கள் என்று வரலாற்று மேதைகள் கூறுகின்றனர். அதன் வாயிலாகத் தமிழ் வட்டெழுத்தைப் பற்றிய பல செய்திகளை அறிய முடிகிறது. தமிழ் பிராமியில் புழக்கத்திலிருந்த “தமிழ்” எழுத்துக்கள் தான் தமிழ் வட்டெழுத்தாக மாறி வளரத் தொடங்கியது என வரலாறு ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

கி.பி. 3 – ஆம் நூற்றாண்டிலிருந்து வட்டெழுத்தானது தமிழ்ப் பிராமியிலிருந்து பிரியத் தொடங்கியது. பிராமியிலிருந்து பிரியத் தொடங்கிய வட்டெழுத்துக்கள் நாளடைவில் சிறுகச் சிறுக வளர்ந்து கி.பி. 6 -ஆம் நூற்றாண்டில் தனித்தன்மை பெற்றது எனலாம்.

அன்று செந்தமிழ் நாடு எனப் போற்றப்பட்ட பாண்டிய நாடு “தன்னார் தமிழ் அளிக்கும் தென் பாண்டி நாடு” என மாணிக்கவாசகரால் பாராட்டப்பட்டது. தமிழை வளர்த்த பாண்டியர்கள் வட்டெழுத்து முறைக்கு ஊக்கம் காட்டினர். கொடுந்தமிழை மேற்கொண்ட சேரர்களும் வட்டெழுத்தில் ஆர்வம் காட்டினர். இரு நாட்டிலும் வட்டெழுத்தில் அரசுச் சாசனங்கள் எழுதப்பட்டன என்றால் அதன் வளர்ச்சியைத் தெரிந்து கொள்ளுங்கள்.

வட்டெழுத்துப் பகுதிகள்


தமிழ் வட்டெழுத்து தமிழகம் முழுவதிலும் பரவிச் செயல்முறையில் இருந்தது. தமிழகப் பகுதிகளாகிய மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், கோவை, சேலம், வடாற்காடு, தென் ஆற்காடு, செங்கற்பட்டு போன்ற பகுதிகளிலும் பரவியிருந்தது. கொங்கு நாட்டு மன்னர்களின் சாசனங்களிலும் தமிழ் வட்டெழுத்துக்கள் காணப்படுகின்றன.

தமிழ்க்கோலெழுத்துக்கள் – “மலையாண்மா”


பாண்டிய நாட்டிலும் சேர நாட்டிலும் பல நூற்றாண்டுகள் கொடி கட்டிப்பறந்த வட்டெழுத்துக்கள் நாள்பட நாள்பட அவை ஒழுங்கு முறையில் எழுதப்படாமல் உருமாற்றங்களைப்பெற்று தமிழ் வட்டெழுத்து ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டன. இவ்வெழுத்து முறையைத்தான் திருவாங்கூர் போன்ற கேரளப் பகுதிகளில் “மலையாண்மா” என்றும் “கோலெழுத்து” என்றும் அழைக்கலாயினர். சோழர்களின் ஆட்சிக் காலத்தில் வட்டெழுத்து குறையத்தொடங்கியது. ஆனால் சேர நாட்டில் கி.பி. 1663 வரை நிலைத்திருந்தது என திரு. டி.ஏ. கோபிநாதராவ் கூறுகிறார்.

வட்டெழுத்து வீழ்ச்சசி


பாண்டிய நாட்டில் மிகச் செல்வாக்குடன் ஓங்கி வளர்ந்த பாண்டிய நாட்டை வென்ற சோழர்கள் தமிழ் வட்டெழுத்துக்களை ஆதரிக்கவில்லை. முதலாம் பராந்தகச்சோழன் முதலாம் இராசராசன் காலம் வரையாண்ட சோழர்கள் வட்டெழுத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வட்டெழுத்து பாண்டியர் பகுதிகளில் மறைந்துவிட்டது.

தமிழ்க் கிரந்தம் உதயம்


தென் இந்தியா முழுவதையும் ஒரு குடையின் கீழ் வைத்தாண்ட சோழர்கள் காலத்தில் தமிழ் வட்டெழுத்து மங்கி கிரந்தத் தமிழ் மேலோங்கியது. பல்லவர்களால் போற்றி வளர்க்கப்பட்ட “பிராமிலிபி”யின் வழிவந்த கிரந்தமும், அதனை ஒட்டி வளர்ந்த கிரந்தத் தமிழும் வழக்காறு பெற்றது. சோழ மன்னர்களால் போற்றி வளர்க்கப்பட்டது. வட்டெழுத்துக்கள் மறைந்து கிரந்தத் தமிழ் தலை தூக்கியது.

தமிழ் இலக்கியங்கள்


“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறுநல்லுலகம்” எனப் புகழப்படும் தமிழ் உலகில் பல விலக்கியங்கள் தற்பொழுது தமிழகத்தில் தமிழ் பற்றும் புத்துணர்வும், மொழித் தூய்மையும், ஒழுங்குமுறை எழுத்து வடிவமைப்பும் அமையக் காரணங்களாக அமைகின்றது. இலக்கியங்கள் அனைத்துமே பெரும்பாலும் 1. முதற்பொருள், 2. கருப்பொருள், 3. உரிப்பொருள், என வகைப்படுதப்பட்டுள்ளன.

நம் தமிழ்மொழி இலக்கியவளம் பெற்ற மொழியாகும். இலக்கியங்களும் இலக்கணநூல்களும் பெருகி இருந்தமையால் தமிழ்மொழி திருந்திய மொழியாக, திருத்தம் செய்யப்பட்ட மொழியாக, ஒழுங்கு படுத்தப்பட்ட மொழியாகச் சிறப்புற்றது. இலக்கண மரபுகளைத் தகுத்து ஒழுங்குபடுத்தி “எழுத்து”, “சொல்”, “பொருள்” என்ற மூன்று தலைப்புக்கள் ஒலியைக்குறிக்கும் குறில், நெடில், ஆய்தம், இகரம், உகரம் போன்ற அனைத்துத் தமிழ் இலக்கண நெறிகளை நாம் அறிவோம்.

தமிழ் மொழியின் நான்கு நிலைகள்


1. பண்டைத் தமிழ் நிலை
2. காப்பியக்காலத் தமிழ் நிலை
3. இடைக்காலத் தமிழ் நிலை
4. தற்காலத் தமிழ் நிலை

என நான்கு வகைகளாகப் பிரிக்கிறார். திரு. எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள்,

பண்டையத் தமிழை அறியத் தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும் உதவுகின்றன.

இடைக்காலத் தமிழை அறியத் தேவாரம், திவ்யப்பிரபந்தம், சிந்தாமணி போன்ற இலக்கியங்கள் உதவுகின்றன.

தற்காலத் தமிழ்நிலையை, நன்னூலுக்குப் பிற்பட்ட இலக்கியங்கள் மற்றும் பேச்சு வழக்குத் தமிழ் கொண்டும் தெரியமுடிகிறது.

ஒலியாகத் திரிந்து, சித்திரமாய் மாறி, பலமொழிகளுடன் இணைந்து உருக்கள் பலப், பல எடுத்து, காலம் பல கடந்து, கல்வெட்டுகளில் உராய்ந்து, செப்பேடுகளிலும் ஓலைச் சுவடிகளிலும் தோய்ந்து, வெள்ளைக் காகிதத்தில் வீரநடை போடும் தேன்தமிழ் மொழியே நம் தாய்த் தமிழ்.

என்றும், மழலையாய், குன்றாச் சிறப்புடன் தேன் சுவையொத்த, தமிழாம் கன்னியை முன்னோன் தன் கருவினில் சுமந்து, மகவாய் ஈன்று, மழலையாய் வளர்த்து, குமரியாய்ப் போற்றிக்காத்து நம்மிடம் விட்டுச் சென்றான். அன்னவள் விரிந்த கூந்தலை வாரிப் பின்னலிட்டு, மலர் வைத்து அன்புடன் அழகு பார்த்தல் நம் கடமையல்லவா? அழகு பார்க்க எவரும் துணியாதது ஏன்? என்பதுதான் புதிராக உள்ளது.

ஃ – அக் என்னும் ஆயுத எழுத்து

அகரக்குறிலொலி துவக்கத்திலெழுப்ப
இக்கென மெய்யொலி இறுதியில் முடிக்க
அக்கென எழும்புமாயுத ஒலியை
மும்முற்றுப்புள்ளிகளெங்கனம் ஒலிக்கும்?
ஒலியே! இல்லா பிற ஒலி திருடும்
அவல நிலையைப் போக்கலாமெண்ணி

மும் முற்றுப் புள்ளியை நீக்கலும் சரியே!








தமிழ் மட்டுமே சிறந்த மொழி

செம்மொழியாகத் தமிழ் உயர்ந்து நிற்பதற்கு முக்கிய காரணம் அதன் தொன்மைத் தன்மையே ஆகும். தமிழினம், தமிழ்மொழி, தமிழ் இலக்கியங்கள் ஆகிய அனைத்தும் மிக்க தொன்மை சார்ந்தவை என்ற கருத்து தற்போது ஆய்வறிஞர்களால் உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றது.

குறிப்பாக தமிழின் தொன்மையை தமிழ் இலக்கியங்கள் பலபட பேசுகின்றன. இறையனார் களவியல் உரையில் காட்டப்படும் முச்சங்க வரலாறு தமிழ் இலக்கியக்களத்தின் தொன்மையை எடுத்துரைப்பதாக உள்ளது. கடல் கொண்ட தென்மதுரையில் இருந்த முதற்சங்கம் 4400 ஆண்டுகள் செயல்பட்டதாகவும், கபாடபுரத்தில் இருந்த இரண்டாம் சங்கம் 3700 ஆண்டுகள் இருந்ததாகவும், மதுரையில் இருந்த முன்றாம் சங்கம் 1850 ஆண்டுகள் இருந்துச் செயல்பட்டதாகவும் இறையனார் களவியல் உரை கருத்துரைக்கின்றது. இந்நூலின் கருத்தின்படி முச்சங்கங்கங்களின் மொத்த செயல்பாட்டுக் காலம் 9950 ஆண்டுகள் என்பது தெரியவருகிறது. ஏறக்குறைய பத்தாயிரம் ஆண்டுகள் சங்ககாலமாகக் கொள்ளப்படவேண்டிய நிலை இதன்வழி ஏற்படுகிறது. அறிஞர்கள் கருதுகிற கடைச்சங்க காலமான கி. பி. முன்றாம் நூற்றாண்டிற்கு முன்னதாக பத்து நூறாண்டுகள் சங்கங்கள் இருந்துள்ளன என்ற முடிவிற்கு இதன் வழியாக வரஇயலும். எனவே சங்க இலக்கியத்தின் காலம் என்பது சுமார் கி. மு. ஏழாம் நூற்றாண்டளவில் இருந்துத் தொடங்குவதாகக் கொள்ளலாம். இந்த எல்லை கற்பனை கலந்தது என்று கருதுவாரும் உண்டு. இருப்பினும் இந்நூற்றாண்டளவையே நிலை நிறுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப் பெற்று வருகின்றன என்று அறியும்போது இக்கருத்தின் உண்மை வலுப்பெறுகிறது.

சங்கங்கள் இருந்தமைக்கும், அவை பழமை வாய்ந்தவை என்பதற்கும் உரிய பல இலக்கியக் குறிப்புகள் சங்கப்பாடல்களிலேயே கிடைக்கின்றன.

"ஈரைம் பதின்மரும் பொருது களத்தொழியப் பெருஞ்சோற்றுமிகுபதம் வரையாது கொடுத்தோய் ( புறநானூறு.2)

என்ற பாவடிகள் சேரமன்னனான பெருஞ்சோற்றுஉதியன் சேரலாதனைப் பெருமைப் படுத்த முடிநாகராயர் என்ற புலவரால் பாடப்பட்டதாகும். இவ்வடிகளில் பாண்டவர்கள் ஐவர், கௌரவர்கள் நூற்றுவர் ஆகியோருக்குப் பாரதப்போரின்போது பெருஞ்சோற்றினை மேற்கண்ட அரசன் வழங்கினான் என்று குறிப்பிடப்படுகிறது. இதன்முலம் பாரதம் நிகழ்ந்த காலத்தோடு சங்க இலக்கிய காலம் ஒன்று படுவது தெரியவருகிறது.

இதுபோன்று பல இலக்கியச் சான்றுகள் தமிழின் தொன்மையை எடுத்தியம்பினாலும், சான்றுகளைத் தரும் இலக்கியங்களின் காலம் என்பது ஐயத்திற்கு இடமளிப்பதால் இவை தரும் சான்றுகளை துணைச் சான்றுகளாகவே வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

மேலும் எழுத்துவடிவ இலக்கியங்களில் பயன்படுத்தப்படும் தமிழ் வரி வடிவம் என்பது பன்னெடுங்காலமாக பல்வகை மாற்றத்திற்கு உட்பட்டு வளர்ந்து வந்திருப்பதால் இவற்றினைக் கொண்டு பண்டைக்கால வரலாற்றினை உறுதி செய்ய முடிவதில்லை. அதனோடு பண்டைய வரி வடிவத்தையும் உணரமுடியாமல் போய்விடுகின்றது.

இக்குறை நீங்கி உண்மை உணர, உணர்த்தப்பட குகைக்கல்வெட்டுக்கள், நடுகற்கள், பழைய கால நாணயங்கள், கடல் அகழ்வாய்வுகள், அகழ்வாய்வுகள் போன்றன தரும் எழுத்துவடிவச் சான்றுகளைக் கொண்டு தமிழின் தொன்மையை ஆராய அறிஞர்கள் முயல்கின்றனர். இவற்றின் உண்மைத்தன்மை மாறாத நிலைப்புத் தன்மை கொண்டவை என்பதனால் இவை முதன்மைச் சான்றுகளாகக் கொள்ளப்படுகின்றன.

குகைக்கல்வெட்டுக்கள்

தமிழ்நாட்டில் உள்ள தொன்மைவாய்ந்த குகைகளில் காணப்படும் கல்வெட்டுக்களில் இருந்துக் கிடைக்கும் எழுத்துவடிவங்களை ஆராய்ந்து அவற்றின் வழியாக தமிழின் தொன்மையை அறிஞர்கள் உறுதிப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

ஐராவதம் மகாதேவன் தமிழின் தொன்மையை அறிந்து கொள்ள பண்டைய கால குகைக்கல்வெட்டுக்கள் முன்றினை முன்வைக்கின்றார்.

"குகைக்கல்வெட்டுக்களில் மிகவும் முக்கியமானவை மூன்று. மாங்குளத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனும் (கி. மு. இரண்டாம் நூற்றாண்டு), ஜம்பையில் அதியன் நெடுமான் அஞ்சியும்(கி. பி. முதல் நூற்றாண்டு), புகழுரில் சேரல் இரும்பொறையும் (கி. பி. இரண்டாம் நூற்றாண்டு) வெட்டி வைத்த கல்வெட்டுக்களாகும். இவை சங்ககாலத்தைச் சார்ந்தவை என்று உறுதியாகக் கூறலாம் என்ற அவரின் கருத்து தமிழ்ச்சங்க காலத்தின் கால எல்லையை உறுதிப் படுத்தும் ஆவணமாகும்.

மயிலை சீனி. வேங்கடசாமி ஏறக்குறைய இருபத்தைந்து குகைக் கல்வெட்டுக்களை தமிழின் தொன்மைக்கு முன்வைக்கின்றார். மீனாட்சிபுரம் கல்வெட்டு, திருவாதவூர் கல்வெட்டு, கீழவளவு, கொங்கர் புளியங்குளம், விக்கிரமங்கலம், மேட்டுப்பட்டி, சித்தன்னவாசல், கருங்காலக்குடி, மருகல்தலை, அழகர்மலை, வரிச்சியூர், திருப்பரங்குன்றம்,முத்துப்பட்டி, ஆனைமலை, புகழுர், திருச்சிராப்பள்ளி, குன்றக்குடி, மாமண்டுர், அரசலூர், பிள்ளையார்பட்டி, திருநாதர் குன்றம், கழிஞ்சமலை, ஐயர்மலை, சங்கரமலை, மாலகொண்டாக் கல்வெட்டு போன்ற கல்வெட்டுக்களில் காணப்படும் செய்திகள், மற்றும் எழுத்துவடிவங்கள் போன்றனவற்றைக் கொண்டுத் தமிழின் தொன்மையை மயிலை சீனி . வேங்கடசாமி நிறுவுகின்றார். (மயிலை சீனி. வேங்கடசாமி, சங்ககாலத் தமிழக வரலாறு பக் 4565) இவற்றை அவர் அசோகப் பேரரசர் காலத்திற்கு முன்னது என்றும் உறுதி செய்கின்றார். மேலும் இக்கல்வெட்டுக்களில் காணலாகும் எழுத்து வடிவங்கள் கி. பி. முன்றாம் நூற்றாண்டிற்குப் பின்னதாக வடிக்கப்பெற்ற கல்வெட்டுக்களில் இருந்து வேறுபட்டன என்பதையும் அவர் உறுதி செய்கின்றார். இதன் காரணமாக முத்த கல்வெட்டுக்களாக இவை உறுதி செய்யப்படுகின்றன. இக்கல்வெட்டுக்களின் வாயிலாக சங்க காலத்தைய ஊர்ப்பெயர்கள், வணிகக் குழுக்கள், அரசர்கள், மக்கள் பெயர்கள் போன்றன அறியப் பெறுகின்றன. இவற்றின் வாயிலாக சங்க இலக்கிய மரபுகளுடன் இவை ஒத்துப்போவதால் இவை சங்கத்தின் காலத்தை முடிவு செய்ய உதவியுள்ளன என்பது குறிக்கத்தக்கது.

நாணயங்கள்

தொன்மை காலத்து நாணயங்களில் காணப்படும், எழுத்து, உருவ அமைப்புகள் கொண்டும் தமிழின் இருப்பை, தொன்மைக்காலத்தது என்று உணர்த்தமுடிகின்றது. நடன. காசிநாதனின் `தமிழர் காசுஇயல்' என்ற நூல் சங்ககாலம் முதல் தமிழகத்தின் நாணய வளர்ச்சியை எடுத்தியம்புவதாக உள்ளது.

இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள அழகன் குளம் மற்றும் பூம்புகார் ஆகியவற்றில் நிகழ்த்தப்பெற்ற கடலாய்வுகள் வழியாகக் கண்டெடுக்கப் பெற்ற நாணயங்கள் தமிழின் தொன்மையைக் காட்டும் மிகச் சிறந்த சான்றுகளாக விளங்குகின்றன.

"பூம்புகாரக் காசில் முன்பக்கம் யானையின் உருவமும், பின்பக்கம் புலி வலது காலைத் தூக்கிய நிலையில் உள்ள உருவமும் காணப்படுகிறது. அழகன் குளக் காசுகளில் பெரியதாக உள்ள காசில் முன்பக்கம் யானை மற்றும் எண் மங்கலச் சின்னங்களும் பின்பக்கம் மீன் உருவம் போன்றும் உள்ளன.(நடன. காசிநாதன், தமிழர் காசுஇயல்.. 21) என்ற அவரின் கருத்து இதனை மெய்ப்பிப்பதாக உள்ளது.

இவை தவிர பல வெளிநாட்டுக் நாட்டுக் காசுகளும் தமிழகத்தில் கிடைத்துள்ளன. குறிப்பாக ரோமாணிய நாட்டின் காசுகள் தமிழகத்தின் பல பகுதிகளில் கிடைத்து வருகின்றன. இவற்றின் கால அளவும் தமிழின் தொன்மையை அறிவிக்க உதவுகின்றன. `இய்யல் என்னும் ஊர் சேர நாட்டின் பண்டைத் துறைமுகங்களாகியத் தொண்டி மற்றும் முசிறி ஆகியவைகளுக்கிடையில் அமைந்துள்ளது. இய்யலில் கிடைத்துள்ள காசுகளில் நான்கு காசுகள் கி. மு. இரண்டாம் நூற்றாண்டளவில் ரோமானிய நாட்டில் நிலவிய ` ரிபப்ளிகன்' காலத்தில் வெளியிடப்பட்டவை. அவை மிகவும் தேய்ந்த நிலையில் காணப்படுகின்றன. ஆனாலும் கி. மு. 123 ல் இருந்து கி. மு. 86 ஐச் சார்ந்தது என்பது தெளிவாகும் என்று டாக்டர் பரமேஸ்வரி லால் குப்தா தம்முடைய நூலில் குறிப்பிட்டுள்ளார் (மேற்கோள், மேலது) இக்கருத்தின் முலம் தமிழர்களின் வாணிகப் பெருமை ரோமாபுரி வரை பரவியிருந்தமை தெரியவருகிறது. இவற்றின் முலமாகவும் தமிழின் காலத்தை நிர்ணயித்துக் கொள்ள முடிகின்றது.

ரோமானியத்தில் இருந்து இந்தியாவிற்கு வந்த பிளைனி (கி.பி. 70), பெரிபுளுஸ் (கி.பி. 80), தாலமி (கி.பி. 120)ஆகியோர் தம் குறிப்புகளும் தமிழகத்தில் முவேந்தர் ஆட்சி நடைபெற்றதையும், வணிகம் சிறப்புற்றிருந்ததையும் குறிக்கின்றன. (விரிவிற்கு : மா. கந்தசாமி, தமிழகத் தொன்மையும் சிறப்பும், குமரன் பதிப்பகம் , சென்னை)

இவ்வாறு நாணயங்கள் வழியாகவும் தமிழின் தொன்மையை நிறுவிக் கொள்ள முடிகின்றது.

மேற்காட்டியவற்றின் வழியாக சங்க காலம் என்பதன் முடிவுப் பகுதியை உறுதி செய்து கொள்ளமுடிகின்றது. அதாவது கி. பி. முன்றாம் நூற்றாண்டிற்கு முன்னதான வாழ்வினைச் சங்கத் தமிழ் மக்கள் பெற்றிருந்தனர் என்பதே அந்த முடிவாகும். அக்காலத்திலேயே நயத்தக்க நாகரீகம் மிக்க உயர்குடியாக தமிழ்மக்கள் வாழ்ந்தனர் என்பதற்கு அவர்களின் சங்க இலக்கியங்கள் சான்றுபயக்கின்றன.

இந்தக் காலத்திற்கும் முன்னதாக தமிழன் வாழ்ந்திருக்கிறான் என்பதாக தற்போதைய ஆய்வுகள் சென்று கொண்டிருக்கின்றன. ஹரப்பா, மொகஞ்சதாரோ என்ற பண்டைய நாகரீகக் களத்தில் வாழ்ந்த குடி தமிழ்க்குடி என்பதே தற்போதைய ஆய்வுகளின் முடிவாகும். இப்பகுதிகளில் காணக்கிடைக்கும் வரிவடிவங்கள் தமிழின் தொன்மை வடிவங்கள் என்பதைப் பின்லாந்து அறிஞர் `பர்கோலா' நிறுவிவருகிறார். சிந்து சமவெளி நாகரீகம் எனப்படும் இந்த நாகரீகத்தின் முலமே திராவிடம் என்ற கருத்தினை உலக அளவில் உறுதி செய்யும் ஆய்வுகள் தற்போது எழத்தொடங்கிவிட்டன.

ஆரியர்கள், திராவிடர்கள் வடமொழி, தென்மொழி என்ற இருஎல்லைகளில் ஆரியர்களுக்கு முந்தையவர்களாகத் திராவிடர்கள் சிந்துசமவெளியில் வாழ்ந்தனர் என்ற கருத்தினுக்கு வலுசேர்க்கும் வண்ணமாக இவ்வாய்வுகள் தற்போது வலிமை பெற்று வருகின்றன. அங்குக் கிடைத்துள்ள ஆபரணங்கள், கருவிகள், மண்பாண்டங்கள் போன்றவற்றில் உள்ள எழுத்து வடிவங்களை முன்வைத்தே இவ்வாய்வுகள் நிகழ்ந்து வருகின்றன. இவற்றை மெய்ப்பிக்க கிடைத்திருக்கும் சான்றுகளைக் கொண்டு அவற்றின் வழியாகப் பெறப்படும் வாழ்முறை, நாகரீகம், பண்பாடு போன்றவற்றின் அடிப்படையில் திராவிட இனத்தை முன்னைப் பழமைக்கும் முத்த பழமையாக காட்டி நிற்பதே இவ்வாய்வுகளின் நோக்கமாகும்.

இந்திய அரசின் செம்மொழி நிறுவனமும் தமிழின் தொன்மையை ஒத்துக் கொள்கிறது. அது எவ்வளவு காலம் என்பதில்தான் சிக்கல் உள்ளது. செம்மொழி நிறுவனம் தமிழின் தொன்மை என்பதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று குறித்துத் தன்னிறைவை அடைகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கால மொழிக்கு செம்மொழித் தகுதி வழங்கலாம் என்ற கருத்துரு ஏற்கப்பட்டிருப்பினும் தமிழின் தொன்மை அதனைத் தாண்டி மிகவும் முந்தையது என்பதை நிறுவ தமிழ்த் தொன்மை பற்றிய ஆய்வுகள் உதவும் என்பதில் ஐயமில்லை.

தமிழின் தொன்மை

உலகில் முதல், முதல் மக்கள் தோன்றிய நாடு தமிழகமும், அதனையடுத்திருந்த கடல் கொண்ட தென்னாடுமே என நில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

காவிரிப்பூம்பட்டிணத்தில் நிலத்து நின்று வாழும் தமிழ் மக்களை

"பதியெழ அறியாப் பழங்குடியினர்" என இளங்கோவடிகள் கூறுகிறார்,

இதற்கு உரை கூற வந்த அடியார்க்கு நல்லார்

"படைப்புக் காலந்தொட்டே வாழுங் குடியினர்"

எனக் கூறியிருக்கிறார்.

தமிழ் மக்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பொழுது

"கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடியினர்"

என ஆசிரியர் பரிமேலழகர் கூறுகிறார். இது கற்பாறைகள் தோன்றிய

காலத்திற்குப் பின்னும், அது மழை பெய்து, பெய்து கரைந்து மணலாகத்

தோன்றிய காலத்திற்கு முன்னும் உள்ள காலத்தைக் குறிப்பிடுவதாகும்.

இத்தையக மக்கள் பேசிய மொழியே தமிழ் மொழியாகும்.

தமிழ் மொழியின் காலத்தை எவரும் கணித்துக் கூறுவதற்கில்லை,

ஏனெனில் அது ஓரு காலங்கடந்த மொழி, அதற்கு வரலாறு இல்லை.

எனவே அதன் தொன்மையை ஆராய்ந்து கூறுவதற்கில்லை. எனினும்

காவியமும், ஓவியமும், காவிரியும், வைகையும், கட்டிடமும், சிற்பமும்,

கல்வெட்டும், புதை பொருட்களும் ஓருவாறு தமிழ் மொழியின் தொன்மையை

உலகிற்குக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

உலக மொழி ஆராய்ச்சியாளர்களில் சிலர் "தமிழ் மொழியே உலகின் முதல் மொழி" எனக் கூறுவர். இன்னுஞ் சிலர் "இலத்தின்", "கீரிக்" மொழிகளுக்கு முந்திய மொழி" எனக் கூறுவர். இவற்றில் எது உண்மையாகவிருப்பினும் அது தமிழின் தொன்மைச் சிறப்பைக் காட்டுவதாகவே இருக்கும்.

முற்காலத்திய சீன யாத்திரீகர் திரு. யுவாங் சுவாங் முதல் பிற்காலத்திய ஜி.யு.போப், கால்டுவெல் வரையுள்ள வேற்று நாட்டினர், வேற்று மதத்தினர் வேற்று மொழியினர் ஆகிய பலரால் தமிழின் பண்பட்ட தன்மை போற்றி பாரட்டப்பட்டிருக்கிறது. இந்த அளவிற்கு பாரட்டைப் பெற்ற ஓரு மொழி உலகின் பழைய மொழிகளில் எதுவுமேயில்லை. ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் ஒரே இனத்தால், ஒரே மொழியால் தொடர்ந்து ஆளப் பெற்றுவந்த நாடு நம் தமிழ் நாடு என்பதே அதன் மொழியின் தொன்மைக்கு சான்று.

1700 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் பலர் மலாயாவை, கெடாவை, சயாமை கைப்பற்றி ஆண்ட செய்திகளும், அவர்களில் முதலாம் குலோத்துங்கன் பர்மாவை ஆண்ட செய்தியும், சோழன் கரிகாலன் இலங்கையைக் கைப்பறி ஆண்ட செய்தியையும் இலக்கியங்களாலும், வரலாறுகளாலும், கல்வெட்டுக்களாலும்

அறியப்படுகின்ற உண்மைகளாகும். இதனால் தமிழ் மொழியானது

அக்காலத்திலுமே உள்நாட்டை ஆட்சி புரிந்தும், வெளிநாட்டை ஆட்சி புரியும் ஓரு வல்லரசின் ஆட்சி மொழியாகவும் இருந்திருக்கின்றது என்பது தெரியவருகிறது.

2000ம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் குறிப்புகளில் பல தமிழ் பெயர்கள் காணப்படுகின்றன 2300 ஆண்டுகளுக்கு முன்னைய சில பிராமியக் கல்வெட்டுக்கள் தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. 2400 ஆஅண்டுகளூக்கு முன்புள்ள பாணினி காலத்திலேயே

தமிழில் "நற்றிணை" என்னும் சிறந்த இலக்கண நூல் தோன்றியிருக்கிறது

2800 ஆண்டுகளுக்கு முன்பு ரோமாபுரியை ஆண்ட ஏழாவது சாலமோன் காலத்திலேயே தமிழ் நாட்டிலிருந்து, தமிழ்நாட்டுக் கப்பல்களில்,

தமிழ்நாட்டுப் பண்டங்களை, தமிழ் நாட்டு வணிகர்கள் கிரேக்க நாட்டிற்குக்

கொண்டு சென்று தமிழ் மொழியிலேயே விலை பேசி விற்று வந்திருக்கின்றனர்.

அப் பொருட்களுக்கு இன்னும் தமிழ்ச் சொற்களே வழங்கப் பெற்று வருகின்றன.

அரிசி "ரைஸ்" எனவும், மயில் தோகை "டோ கை" எனவும், சந்தனம் "சாண்டல்" எனவும், தேக்கு "டீக்கு", எனவும் கட்டுமரம் "கட்டமாரன்" எனவும் , இஞ்சி "ஜிஞ்சர்" எனவும், ஓலை "ஒல்லா" எனவும் கயிறு "காயர்" எனவும் ஆயின. காலப்போக்கில் இத் தமிழ்ச் சொற்கள் அவர்களின் சொற்களாக மாறி பிரெஞ்ச், ஆங்கில அகராதிகளிலும் புகுந்து கொண்டு விட்டன.

3000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள நூல்களில் இன்று நம்மிடையே சிறிதும் அழியாமல் முழுவதுமாகக் கிடைத்துள்ள நூல் "தொல்காப்பியம்" ஓன்றே.

அதற்கு முன்னும் பல இலக்கண நூல்கள் தோன்றியிருக்கின்றன.

இவ்வுண்மையை "தோலென மொழிப தொன்மொழிப் புலவர்" என தொல்காப்பியரே தமது நூலில் கூறியிருப்பதால் நன்கறியலாம்.

3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என உறுதியாகப் நம்பப் பெறுகிற நூல்களில்

"அகத்தியம்" எனப்படும் இலக்கிய நூல் ஒன்று. இதை 5000 ஆண்டுகளுக்கு

முற்பட்டது என்று கூறுவோறும் உண்டு.

தமிழகத்தில் மூன்று கடற்கோள்கள் அடுத்தடுத்துத் தோன்றி கடல் நீர் நாட்டிற்குள்

புகுந்து நிலப்பரப்பை, மக்களை, தமிழ்ச் சுவடிகளை அழித்துவிட்டன என்றும்,

இது நடந்த காலம் 3000-ம், 5000-ம், 9000-ம் ஆண்டுகளாயின எனவும் கூறப்படுகிறது.

மேலை நாட்டினர் இதை மறுத்து இரண்டே கடற்கோள்கள்தான் எனவும்

அவை 5000 ஆண்டுகளுக்கு முன்பும், 7000 ஆண்டுகளுக்கு முன்பும் எனக் கூறுகின்றனர்.

இதைக் கொண்டு ஆராய்வோம்..

தமிழ் நூல்களின் அழிந்த காலத்தையே நம்மால் அறிய முடியாத போது அது தோன்றிய காலத்தை எவ்வாறு அறிவது? அதற்கு முன்னே இலக்கணம் தோன்றிய காலம்?? அதற்கு முன்னே உரைநடை தோன்றிய காலம்? அதற்கு முன்னே எழுத்து தோன்றிய காலம்??

அதற்கு முன்னே மொழி தோன்றிய காலம் எப்போது? என்பதை எவர் அறிந்து கூற இயலும்?

ஏதெனும் கூற வேண்டுமானல் தமிழ்மொழி தோன்றிய காலத்தை அறிந்து கூறுவது மனித அறிவிற்கு அப்பாற்பட்ட ஒன்று என்றுதான் கூறியாக வேண்டும்.

மேற்கண்ட சில சான்றுகளே தமிழின் தொன்மைச் சிறப்பை உலகிற்கு உணர்த்துமே